Thanjai selvi biography of rory



'ஈசன்' படத்துல 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த' பாட்டையும், அந்தப்பாட்டை பாடின குரலையும் யாராலும் மறக்க முடியாது. படம் வந்த 2010-ல மட்டுமில்லாம, இன்னிக்கு வரைக்கும் அது ஹிட் பாட்டுதான். ஆனா, அந்தப்பாட்டை பாடின தஞ்சை செல்விதான் ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்கன்னு வீடியோ ஒண்ணு சமூக வலைத்தளங்கள்ல பரவிட்டிருக்கு.

'என்னாச்சு' என தஞ்சை செல்வி அவர்களுக்கே போன் போட்டுக் கேட்டோம். பேசவும் தெம்பில்லாம இருந்தவர்கிட்ட 'அம்மாகிட்ட போனை கொடுக்கிறீங்களா' என்றோம்.

''அம்மா விறகடுப்புக்கு சுள்ளிப் பொறுக்க காட்டுக்குப் போயிருக்காங்க. வெயில் நேரத்துக்குத்தான் வீட்டுக்கு வருவாங்க' என்றார் சோர்வாக. அதன்பிறகு, தஞ்சை செல்வியின் உடன்பிறந்த தம்பி ராமை தொடர்புகொண்டோம்.

''அக்கா ஸ்கூல் படிக்கிறப்போ இருந்தே பாட ஆரம்பிச்சிட்டாங்க. அத ஒரு டீச்சர் என்கரேஜ் செய்ய, அது அப்படியே ஸ்டேஜ் புரோகிராம், சினிமா வாய்ப்புன்னு வந்துச்சு. அக்கா வீட்டுக்காரரும் கிராமியப்பாடல்கள் பாடுவார். அக்கா, மாமா ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்டேஜ் புரோகிராம்ல பாடிக்கிட்டிருந்தாங்க. கொரோனா காலத்துல மாமாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு.

அதனால, மாமாவால வெளிய போக வர மேலுக்கு முடியல. அப்போ இருந்து அக்காதான் பாட்டுப்பாடி குடும்பத்தைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி அக்காவுக்கும் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. திடீர்னு உடம்பு ரொம்ப வலிக்குது, கை, கால் தூக்கவே முடியலைன்னு சொன்னாங்க. ஒருகட்டத்துல வலி தாங்க முடியலைன்னு அழ ஆரம்பிச்சாங்க. சாப்பாடும் சரியா எடுத்துக்க முடியல.

ரெண்டே மாசத்துல கிட்டத்தட்ட பத்து கிலோ எடை குறைஞ்சிட்டாங்க. என்னவோ ஏதோன்னு ரத்தம் டெஸ்ட் எடுத்துப்பார்த்தா, அக்காவுக்கு வந்திருக்கிறது முடக்கு வாதம்னு தெரிஞ்சிது. மருமவனுக்கு (தஞ்சை செல்வியின் மகன்) இப்போ தான் பத்து வயசாகுது. அஞ்சாவது படிச்சிட்டிருக்கான். அக்கா இதுல இருந்து மீண்டு வந்தா தான் குடும்பம் பழையபடி சரியாகும்'' என்கிறார் வருத்தமாக.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்...

புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01